
பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியதாக அறிவித்துள்ளார்.
இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.
திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.
புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...
சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.
8 comments:
பெரியார்தாசன்
தாசன் இந்தப் பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா? என்பது வினா?
கண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது!
ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...
எங்கோ எதுவோ பிழையோ? யார் செய்த பிழை? ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்?
நான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்?
இத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா? அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா? அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார்? புகழுக்காகவா? இப்போது மாறியதும் அதற்காகவா?
பெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது?
போலிச் சாமியாரைப் பார்த்த நாம்? இன்று யாரைப் பார்க்கிறோம்?
5:56 AM | Category: |
மாஷா அல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரஹாத்தஹூ சகோதரரே. நல்ல தகவலை தந்துள்ளீர். நன்றி். அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக.
மாற்று சமய சகோதரர்கள் நீங்கள் யாரும் அதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது ஒவ்வொருவரின் தனி உரிமை.
மாற்று சமய சகோதர, சகோதரிகளே தயவு செய்து உங்கள் வாழ்நாளில் திருகுரானை ஒரு முறையேனும் படியுங்கள். உங்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் கிடைக்கும். வாழ்கையில் நாம் எத்தனையோ புத்தகங்களை படிக்கிறோம் சிலவற்றை நமக்கு தேவையானதாக இருக்கும் சிலவற்றை நமக்கு தேவையற்றதாக இருக்கும்.
ஆனால் திருகுரான் இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரிய வழிக்காட்டல் அல்ல இந்த உலக மக்கள் அனைவருக்கும் உரியது. படித்தால் உங்களுக்கே உண்மை புரியும். இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.
மாஷா அல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரஹாத்தஹூ சகோதரரே. நல்ல தகவலை தந்துள்ளீர். நன்றி். அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக.
மாற்று சமய சகோதரர்கள் நீங்கள் யாரும் அதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது ஒவ்வொருவரின் தனி உரிமை.
மாற்று சமய சகோதர சகோதரிகளே தயவு செய்து உங்கள் வாழ்நாளில் திருகுரானை ஒரு முறையேனும் படியுங்கள். உங்களுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் கிடைக்கும். வாழ்கையில் நாம் எத்தனையோ புத்தகங்களை படிக்கிறோம் சிலவற்றை நமக்கு தேவையானதாக இருக்கும் சிலவற்றை நமக்கு தேவையற்றதாக இருக்கும்.
ஆனால் திருகுரான் இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரிய வழிக்காட்டல் அல்ல இந்த உலக மக்கள் அனைவருக்கும் உரியது. படித்தால் உங்களுக்கே உண்மை புரியும். இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.
இவர் என்ன ஆய்ந்தார் என்று தெரியவில்லை இதற்கு முன்பு புத்தமதத்தை ஆய்ந்தார். அது சிறந்தது என்றார் இப்போது குரான் சிறந்தது என்கின்றார். நாளை பைபுள் நல்லா இறுக்கு என்று தன் பெயரை சேசாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ் என்கிற ஜார்ஜ் பெர்னாண்டஸ் ..? (நாளை இந்த பெயரை வச்சுகிட்டாலும் வச்சுபார் அதான் ஏன் சிரமம் நானே தேர்தெடுத்து கொடுக்கிறேன்) இந்தமாதிரி மத சந்தர்ப்ப வாதிகளை என்ன சொல்றது. காட்டில் திரியும், கோவில் முன்னும் பிச்சை எடுக்க வைக்கும் யானையிக்கு தானே மதம் பிடிக்கும். இந்த பாழாய்போன மனிதனுக்கு ஏன் மதம் பிடிக்கிறது. ச்சீ இந்த பழம் புளிக்கிறது என்று விமர்சனம் பண்ணலாம் பண்ணுவார் முஸ்லிம் நண்பர்களே ஜாக்கரதை....
மதம் மாறும் யாருமே பொதுவில் துரோகிகள்தான்...!அதிலும்
படித்த அறிவுஜீவிகள் மதம்மாரும்போது அதில் கட்டாயம் உள்நோக்கம்(பெரும்தொகை-பெரும்பொருள்)
இருக்கும்.திகவில் இருந்துகொண்டு கடவுளே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவனுக்கு கடவுள் நம்பிக்கை
(வேறுமாத கடவுள்மீது)வந்துவிட்டது என்றால் நிச்சயம் இவர்குடும்பத்தில் பணப்பிரச்சனை தலைவிரித்தாடியுள்ளது.
துரோகியை இனியாரும் மதிக்காதீர்கள்.தமிழகத்தில் கருணாநிதி இருக்கும்வரை மதமாற்றங்கள் நடந்துகொண்டுதானிருக்கும்...!
this is correct... very good... excellent... islam religion is very powerful and real religion.. allah oruvane avanukku nigaranavan eavarum illai... allahku akbar... eall pogaulam iraivanukke...
all mathaum ondru than anal silaigalai vanguvathu iravanukku per vaipathu ithan matram eall kalangalilum iravan oru nabi manai anupinan avar esa nabiyai than jesus endru solgirom. markkam manithanai niri paduthuvatharke thavira athai vathai araechi seivatharku illai eall margamum oru karuthai than valiuruthukirathu....pen endral adakkam porumai puthisalithanamum ann endral puthisalithanamum adakkamanavanagaum yarai ematri valkai nadathamai ithai than ariuruthukirathu...iraivan uruvam illathavan per illathavan avanukkku amma appa illathavan thanaga thondriyavan....
அனைது மதகலும் பொதுவாக சொல்வது அன்பும்,மனிதநேயமும்.
திருகுரான் படிதால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைகும் சரி.
கடவுல் பெயரை சொல்லி அப்பாவி பொதுமக்கலை கொல்வது எப்படி சரியாகும்.
Post a Comment