Sunday, March 14, 2010

வேலைவாய்ப்பு வழிகாட்டி

வேலைவாய்ப்பகங்களின் தலைமையிடமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையகம் சென்னை சேப்பாக்கத்தில் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் மொத்தம் 35 மாவட்ட வேலைவாய்ப்பகங்கள் இயங்குகின்றன.

இவற்றுடன் சிறப்பு அலுவவலகங்களாக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பகம், தொழில் திறனற்றோருக்கான வேலைவாய்ப்பகம், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பகம் (மூன்றும் சென்னை) மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் (கோவை) ஆகியன செயல்படுகின்றன. ஓசூரில் துணை வேலைவாய்ப்பு மையம் உள்ளது.

மேற்கண்டவை தவிர, பழங்குடியினருக்கான 4 சிறப்பு வழிகாட்டி மையங்கள் ஊட்டி, சங்காநாபுரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் சிறப்பு வழிகாட்டி மையங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 13 வேலைவாய்ப்பகங்களில் உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன.

வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தல், வேலையளிப்போருக்கு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்தல், இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், வேலை நிலவர தகவல் அளித்தல் உள்ளிட்டவை வேலைவாய்ப்பகங்களின் முக்கியப் பணிகள்.

வேலைவாய்ப்புப் பதிவைப் பொருத்தவரை, எவர் வேண்டுமானாலும் பதிவு செய்துகொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் முதல் மெத்தப் படித்தோர் வரை. எழுதப் படிக்கத் தெரியாதோர் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யலாம்.

முதுநிலைப் படிப்பு, மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், மேலாண்மை உள்ளிட்ட தொழில்சார் படிப்புகள், சி.ஏ. ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ். போன்ற படிப்பு படித்தவர்கள் சென்னை மந்தவெளியில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இப்பதிவை சென்னைக்கு வந்துதான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பகங்கள் மூலமே பதிந்து கொள்ளலாம்.

31.12.2002 நிலவரப்படி, தமிழகத்தில் 50.57 லட்சம்பேர் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். 2002-ல் மட்டும் 10,303 பதிவுதாரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பானது பெரிதும் அருகி வரும் இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் இளைஞர்களை ஆற்றுப்படுத்தவும் போட்டித்தேர்வுகளின் சவால்களை எதிர்கொள்ளவும் வேலைவாய்ப்பகங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன. தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மூலம் இளைஞர்களுக்குத் தேவையான உயர்கல்வி, போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு விவரங்களைத் தந்து உதவி வருகின்றன.

வேலைவாய்ப்பகங்கள் மேற்கொள்ளும் பல்முனை செயல்பாடுகளில் ஒன்று தன்னார்வ பயிலும் வட்டங்கள்](Study Circles)இவை ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பகங்களிலும் செயல்படுகின்றன. எழுத்தர் பதவி முதல் ஐ.ஏ.எஸ். பணி வரையுள்ள தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கான வல்லுநர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் உள்பட அனைத்து வகைப் புத்தகங்களும் உள்ளன. போட்டித் தேர்வெழுதுவோர் இதன் மூலம் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள்.

தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் இதுவரை 376 நபர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த ஒரு மாணவி ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளார். இத்திட்டத்தின் சாதனைக்கு இது ஒரு சிறிய உதாரணம்.

கிராமப்புற மாணவர்கள் இவ்வசதியைப் பெறும் வகையில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அனைத்து ஒன்றியங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வேலையளிப்பவர்களையும் வேலைநாடுவோரையும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒருங்கே சந்திக்க வைக்கிறது. இதன் மூலம் வேலையளிப்போர் தங்களின் தேவைக்கேற்ப நபர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இத்திட்டமானது, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்

மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 3,214 பேர் இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

சுயவேலைவாய்ப்பை மேற்கொள்ள இளைஞர்களிடையே ஊக்குவிக்கப்படுகிறது. வேலைவாய்ப்புத் துறையின் இணையத்தளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதன் மூலம் வேலையளிப்பவர்கள் தங்களின் தேவைக்கேற்ப நபர்களை இணைய தளத்தின் மூலமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இது மட்டுமின்றி, அனைத்துப் போட்டித்தேர்வுகள் குறித்த தகவல்கள், வேலைத்தகவல்கள், உயர்கல்வி வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விவரங்களையும் ஒருங்கே அறிந்து கொள்ளலாம்.

வழிகாட்டுதலின் ஓர் அம்சமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இலவசப் பயிற்சி தரப்படுகிறது. கடந்த ஆண்டில் 1150 பேர் பயிற்சி பெற்றதில் 254 பேர் தேர்ச்சி பெற்றனர்.

பதிவுதாரர்கள் தங்களின் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை பதிவுதாரர்கள் உரிய நேரத்தில் புதுப்பிக்கத் தவறினால் இரண்டு மாதங்கள் வரை புதுப்பித்துக்கொள்ளலாம். அப்போதும் தவறினால் ஒருமுறை மட்டும் சிறப்புச் சலுகையாக 18 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

இச்சலுகையை மறுமுறை பெற இயலாது.

1) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

எண்.140, குயில் தோட்டம்,

ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகை,

முதல்மாடி, சாந்தோம் நெடுஞ்சாலை,சென்னை - 4.

2) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

துடியலூர் அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

3) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு),

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

கோ.புதூர், மதுரை - 625 007.

4) உதவி இயக்குநர்,

தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 212, ஆர்.கே. மடம் சாலை, மந்தைவெளி,

சென்னை - 4.

5) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகம்,

வல்லம் சாலை, அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

தஞ்சாவூர் - 613 007.

6) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

கோ.புதூர், மதுரை - 625 007.

7) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.23, வில்லியம்ஸ் சாலை,

திருச்சிராப்பள்ளி - 620 001.

8) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

9) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.16, சின்னைய்யா தெரு,

வடக்கு மரவனேரி,

சேலம் - 636 007.

10) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,டி.என்.எச்.பி. காம்ப்ளக்ஸ்,

கீழ்தளம், 2-வது அவென்யு,

அண்ணாநகர், சென்னை - 600 040.

11) உதவி இயக்குநர்,

ஆதி திராவிடர் மற்றும்

பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு

மற்றும் வழிகாட்டும் சிறப்பு அலுவலகம்,எண். 10 - 20, ஆற்காடு சாலை, காகிதப்பட்டரை,

வேலூர் - 632 012.

12) உதவி இயக்குநர்,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு

மற்றும் வழிகாட்டும் சிறப்பு அலுவலகம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.23, வில்லியம்ஸ் சாலை,

திருச்சிராப்பள்ளி - 620 001.

13) உதவி இயக்குநர்,

பழங்குடினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.5, கிழக்கு மெயின் சாலை,

காந்திநகர், திருவண்ணாமலை - 606 601.14) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

ஜி.ஆர்.எஸ். எண். 59, 14ஏ,

அண்ணாநகர் தெரு,

இராமநாதபுரம் - 623 501.

15) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.83, மங்களபுரம் ரயில்வே

ஸ்டேஷன் சாலை,

திண்டுக்கல் - 624 603.

16) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

வார்டு எண்.16, கதவு எண். 1385,

நேருஜி சாலை,

தேனி - 625 531.

17) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

20-15-15ஏ, தரையூர் சாலை,

பெரம்பலூர்.

18) தொழில்துறை வழிகாட்டும் அலுவலர்,

தொழில்முறை வழிகாட்டும் அலுவலகம்,

57-இ, ஜஸ்டிஸ் வில்லா,

ஓல்டு கார்டன் சாலை,

உதகமண்டலம் - 643 001.

19) தொழில்துறை வழிகாட்டும் அலுவலர்,

பழங்குடியினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம்,

சங்கராபுரம் - 606 401.

20) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,

துணை வேலைவாய்ப்பு அலுவலகம், ஓசூர் - 635 125.

21) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், (தொழில் நுட்பப் பிரிவு),

தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய வணிக வளாகம்,

24, சர் தியாகராய சாலை,

ஆலை அம்மன் கோவில் எதிரில்,

தேனாம்பேட்டை, சென்னை - 18.

22) உதவி இயக்குநர்,

பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்

வழிகாட்டும் அலுவலகம்,

எண். 51, பழைய டிஸ்ட்ரிக்ட் கோர்ட்,

கட்டடம், கொக்கிராக்குளம்,

திருநெல்வேலி - 627 009.

23) உதவி இயக்குநர்,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான

தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

24) உதவி இயக்குநர்,

பழங்குடியினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 16, சின்னைய்யா தெரு,

வடக்கு மரவனேரி,

சேலம் - 636 007.

25) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.1/16, ஏ.ஏ. சாலை,

விருதுநகர் - 626 001.

26) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

பிளாட் எண். 4,5 மற்றும் 6,

கதவு எண்.1, சி.பி. நாயுடு தெரு,

திருவள்ளூர் - 602 001.

27) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம்,

டி.என்.எச்.பி. காம்ப்ளக்ஸ், கீழ்தளம்,

2-வது அவென்யூ, அண்ணா நகர்,

சென்னை - 600 040.

28) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

செம்மண்டலம்,

கடலூர் - 607 001.

29) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

14, அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

கோரப்பள்ளம்,

தூத்துக்குடி - 628 101.

30) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

56, டீச்சர்ஸ் காலணி,

காமராசர் அவென்யூ, அடையாறு,

சென்னை - 600 020.

31) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

பிளாட் எண். 35-36,

ஆறுமுக செட்டியார் லே அவுட்,

மருதூர் கிராமம், விழுப்புரம் நகராட்சி,

விழுப்புரம்.

32) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எத்திராஜ் கல்யாண மண்டபம்,

நாகைசாலை, திருவாரூர் - 610 001.

33) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

5, கிழக்கு மெயின் சாலை,

காந்தி நகர், திருவண்ணாமலை - 606 601.

34) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 69, டி.எஸ்.எஸ். 1223 - 1225,

பெருமாள் வடக்கு தெரு,

நாகப்பட்டினம் - 611 001.

35) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 122, தெற்கு ரத வீதி,

சிவகங்கை - 623 560.

36) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.6, 7, 2-வது குறுக்குத் தெரு,

செங்குந்தபுரம்,

கரூர் - 639 002.

37) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

20-ஏ, 4-வது கிராஸ் தெரு,

கோ - ஆப்ரெடிவ் காலனி,

கிருஷ்ணகிரி - 635 001.

38) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.5391, மார்த்தாண்டபுரம்,

2-வது தெரு, புதுக்கோட்டை - 622 001.

39) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

57 இ, ஜஸ்டிஸ்வில்லா, ஓல்டு கார்டன் சாலை,

உதகமண்டலம்-643001

40) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எம். 58, இராமவர்மாபுரம்,

கன்னியாகுமரி (இருப்பு)

நாகர்கோவில் - 629 001.

41) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.51, பழைய டிஸ்ட்ரிக்ட் கோர்ட் பில்டிங்,

கொக்கிரக்குளம், திருநெல்வேலி - 627 009.

42) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

மாவட்ட நல நிதிக்குழு வணிக வளாகம்,

எண்.16, வில்லியம்ஸ் சாலை,

கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி - 1.

43) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

நெ.11, வைகுண்டபெருமாள் கோயில்,

சன்னதி தெரு, காஞ்சிபுரம் - 631 502.

44) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.3/86, கொண்டிசெட்டிப்பட்டி கிராமம்,

மோகனூர் சாலை, நாமக்கல்.

45) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

செம்மண்டலம், கடலூர் - 607 001.

46) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 19 - 20, ஆற்காடு சாலை,

காகிதப்பட்டரை, வேலூர் - 632 012.

47) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், (தொழில் நுட்பப் பிரிவு)

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

48) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.4, சென்னிமலை சாலை,

ஈரோடு - 638 002.

நன்றி தினமணி

No comments: