Sunday, March 28, 2010

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும் செய்தி

ஜுலை மாநாட்டிற்கு மக்களை அழைப்பதற்கு ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கை மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அதில் உள்ள முக்கிய அம்சங்கள் இங்கு தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :

1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.
ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.
1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.
1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்
1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.
25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மக்கள் தொகை (பக்கம் 13)
முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %
அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்
2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்
அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர். ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

மாதவருமானம் (பக்கம் 30)
ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.

இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி

--
السلام عليكم ورحمة الله وبركاته

Monday, March 22, 2010

தர்ஹா-சந்தனக்கூடு தேவையா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..

கடந்த ஆண்டு நமது ஊரில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தர்ஹா-சந்தனக்கூடு மற்றும் அனாச்சாரங்களை தடுத்து நிறுத்தவேண்டும் அதனால் நமதூர் மக்கள் மறுமையில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் துபையிலிருந்து ஜமாத்திற்கு கடிதம் எழுதினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. பின்பு அந்த கடிதம் நகல் எடுக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டாவது அவர்கள் அதை நிறுத்தவேண்டும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் குர் ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த கடிதத்தை இங்கு வெளியிடுகிறோம்..அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையை தந்து அருள்புரிவானாக......

இன்று முத்தாரம் இதழ் அலுவலகம் முற்றுகை!


29/03/2010 தேதியிட்ட முத்தாரம் இதழில் முஹம்மது நபி என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை தமது உயிரினும் மேலாக மதித்த போதும் அவர்களுக்கு சிலைவைப்பதையும் உருவமாக வரைவதையும் ஏற்றுக் கொள்வதில்லை.

நபிகள் நாயகத்திற்கு சிலைவைத்தாலோ, கார்ட்டூன் போட்டாலோ முஸ்லிம் சமுதாயம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்பது பாமர மக்களுக்கும் தெரிந்த உண்மை.

தெரிந்து கொண்டே முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக கார்ட்டூன் வரைந்ததற்காக முத்தாரம் இதழ் தனது சன் தொலைகாட்சி மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் இன்று மாலை நான்கு மணிக்கு முத்தாரம் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிடுவார்கள்.

மேலும் நாளையதினம் தமிழகமெங்கும் தினகரன், குங்குமம், முத்தாரம் இதழ்களைத் தீவைத்துக் கொளுத்துவதுடன் மாநிலமெங்கும் உள்ள தினகரன் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Tuesday, March 16, 2010

இஸ்லாத்தை ஏற்ற பெரியார்தாசன் உம்ராவை நிறைவேற்றினார்!






சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெரியார்தாசன் (தற்போது அப்துல்லாஹ்) கடந்த சனிக்கிழமை (13-3-2010) புனித உம்ராவை நிறைவேற்றியுள்ளார். அவர் உம்ராவை நிறைவேற்றுகைகயில் எடுக்கப்பட்ட புகைப்படம்!

Monday, March 15, 2010

தலைமைக்கழக செய்தி

1.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு?
அந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.
இனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி
சிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே!
இப்போதே தயாராவீர்! பயணத்திற்கு முன்பதிவு செய்வீர்

2.
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு
இதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு
இந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்
இரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி
டி.என்.டி.ஜே. நடத்தும்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
ஒடுக்கப்பட்ட சமுதாயமே! உரிமைக் குரல் எழுப்ப ஓடி வா!
ஒதுக்கப்பட்ட சமுதாயமே! ஒதுக்கீடு பெற ஒன்றிணைந்து வா!

2.
அரசியலில் ஓட்டுப் பொறுக்குவதிலும்
தேர்தலில் சீட்டுக் கேட்பதிலும்
நாட்டம் கொள்ளாத உங்களின் ஒரே அமைப்பு
உங்கள் நம்பிக்கை நட்சத்திரம்
உங்கள் உரிமைக் குரல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்காக மத்திய அரசுப் பணிகளில் 10 % இட ஒதுக்கீடு கோரி நடத்தும்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
வெற்றியின் முகவரிகளே!
வங்கக் கடல் வழித்தடம் மாறியதோ என்று வியக்க தீவுத் திடலில் சங்கமிக்க வாரீர்!
ஒரு சரித்திரம் படைக்க வாரீர்!

3. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
குடந்தையை குலுங்கச் செய்த பேரணி கண்டு
தமிழகத்தை உலுக்கிய சிறை நிரப்பும் போராட்டம் கண்டு,
மாநிலத்தில் 3.5 % இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த உங்கள் அபிமான அமைப்பு
மத்தியில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி 10 % இட ஒதுக்கீடு பெற்றுத் தர
இம்மாநாட்டிற்குக்குக் குடும்பத்துடன் வர உங்களை அன்புடன் அழைக்கின்றது.
இட ஒதுக்கீடு மத்தியில் சட்டமாக!
திரள்வோம் தீவுத் திடலில் சமுத்திரமாக!

4.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
சமுதாய நலனையே தனது நலனாய் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 % இடஒதுக்கீடு பெறுவதற்காக நடத்தும் கோரிக்கை மாநாட்டிற்கு முஸ்லிம்களே குழந்தைகளுடன் வாரீர்! குடும்பத்துடன் வாரீர்!
தலைநகர் டெல்லியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சட்டமாக!
தலைநகர் சென்னையில் திரள்வோம் சமுத்திரமாக! சரித்திரமாக!

5.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
திருப்புமுனையாகட்டும் தீவுத்திடல் மாநாடு!
தில்லி நாடாளுமன்றத்தில் சட்டமாகட்டும் இடஒதுக்கீடு!
அன்று மாநிலத்தில் முஸ்லிம்களுக்காக
நின்று போராடி 3.5% இட ஒதுக்கீட்டை
வென்று காட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இன்று மத்தியில் 10% இடஒதுக்கீட்டைப் பெற அழைக்கிறது
முஸ்லிம் சமுதாயமே!
வங்கக் கடலுக்கு இணையாய்
சங்கமிப்போம் தீவுத் திடலில்!
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை
சட்டமாக்குவோம் நாடாளுமன்ற அவையில்!

6. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை
விடுதலைப்போரில் வீசியெறிந்தது நம் சமுதாயம்
இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!
விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை
பிடுங்கி எறிந்தது இந்திய அரசாங்கம்
இது இந்த தேசத்திற்கே அவமானம்
இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!
முஸ்லிம் சமுதாயமே
தீவுத் திடலுக்கு விரைவீர்!
திருப்புமுனை காண்பீர்

7.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
கிடப்பில் கிடக்கும் ரங்கநாத் அறிக்கை
குப்பையில் போகாமல் தடுக்க
நடப்பு நாடாளுமன்றத் தொடரிலேயே
நமக்கு அது சட்டமாக
குழுமுவோம் தீவுத் திடலில்
குவித்திடுவோம் வெற்றியை!

8.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ரணகளமானது நாடாளுமன்றம்
ஆனாலும் போராடி நிறைவேற்றியது மன்மோகன் அரசாங்கம்
ரங்கநாத் பரிந்துரையை நிறைவேற்ற மட்டும் கருத்தொற்றுமை வேண்டுமாம்
கருத்தொற்றுமை என்பது கல்லில் நார் உரிப்பதாகும்
கனியட்டும் காலம் என்பது இலவு காத்த கிளியாகும்
பிரதமரின் பிரமாத பேச்சில் ஏமாற மாட்டோம்
இட ஒதுக்கீட்டை இழக்க மாட்டோம் என்று பறைசாற்ற
தீவுத்திடலில் கூடுவோம்
திருப்புமுனையை உருவாக்குவோம்.

Sunday, March 14, 2010

வேலைவாய்ப்பு வழிகாட்டி

வேலைவாய்ப்பகங்களின் தலைமையிடமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையகம் சென்னை சேப்பாக்கத்தில் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் மொத்தம் 35 மாவட்ட வேலைவாய்ப்பகங்கள் இயங்குகின்றன.

இவற்றுடன் சிறப்பு அலுவவலகங்களாக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பகம், தொழில் திறனற்றோருக்கான வேலைவாய்ப்பகம், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பகம் (மூன்றும் சென்னை) மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் (கோவை) ஆகியன செயல்படுகின்றன. ஓசூரில் துணை வேலைவாய்ப்பு மையம் உள்ளது.

மேற்கண்டவை தவிர, பழங்குடியினருக்கான 4 சிறப்பு வழிகாட்டி மையங்கள் ஊட்டி, சங்காநாபுரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் சிறப்பு வழிகாட்டி மையங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 13 வேலைவாய்ப்பகங்களில் உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன.

வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தல், வேலையளிப்போருக்கு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்தல், இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல், வேலை நிலவர தகவல் அளித்தல் உள்ளிட்டவை வேலைவாய்ப்பகங்களின் முக்கியப் பணிகள்.

வேலைவாய்ப்புப் பதிவைப் பொருத்தவரை, எவர் வேண்டுமானாலும் பதிவு செய்துகொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் முதல் மெத்தப் படித்தோர் வரை. எழுதப் படிக்கத் தெரியாதோர் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யலாம்.

முதுநிலைப் படிப்பு, மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், மேலாண்மை உள்ளிட்ட தொழில்சார் படிப்புகள், சி.ஏ. ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ். போன்ற படிப்பு படித்தவர்கள் சென்னை மந்தவெளியில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இப்பதிவை சென்னைக்கு வந்துதான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பகங்கள் மூலமே பதிந்து கொள்ளலாம்.

31.12.2002 நிலவரப்படி, தமிழகத்தில் 50.57 லட்சம்பேர் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். 2002-ல் மட்டும் 10,303 பதிவுதாரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பானது பெரிதும் அருகி வரும் இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் இளைஞர்களை ஆற்றுப்படுத்தவும் போட்டித்தேர்வுகளின் சவால்களை எதிர்கொள்ளவும் வேலைவாய்ப்பகங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன. தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மூலம் இளைஞர்களுக்குத் தேவையான உயர்கல்வி, போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு விவரங்களைத் தந்து உதவி வருகின்றன.

வேலைவாய்ப்பகங்கள் மேற்கொள்ளும் பல்முனை செயல்பாடுகளில் ஒன்று தன்னார்வ பயிலும் வட்டங்கள்](Study Circles)இவை ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பகங்களிலும் செயல்படுகின்றன. எழுத்தர் பதவி முதல் ஐ.ஏ.எஸ். பணி வரையுள்ள தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கான வல்லுநர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் உள்பட அனைத்து வகைப் புத்தகங்களும் உள்ளன. போட்டித் தேர்வெழுதுவோர் இதன் மூலம் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள்.

தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் இதுவரை 376 நபர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த ஒரு மாணவி ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளார். இத்திட்டத்தின் சாதனைக்கு இது ஒரு சிறிய உதாரணம்.

கிராமப்புற மாணவர்கள் இவ்வசதியைப் பெறும் வகையில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அனைத்து ஒன்றியங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வேலையளிப்பவர்களையும் வேலைநாடுவோரையும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒருங்கே சந்திக்க வைக்கிறது. இதன் மூலம் வேலையளிப்போர் தங்களின் தேவைக்கேற்ப நபர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இத்திட்டமானது, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்

மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 3,214 பேர் இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

சுயவேலைவாய்ப்பை மேற்கொள்ள இளைஞர்களிடையே ஊக்குவிக்கப்படுகிறது. வேலைவாய்ப்புத் துறையின் இணையத்தளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதன் மூலம் வேலையளிப்பவர்கள் தங்களின் தேவைக்கேற்ப நபர்களை இணைய தளத்தின் மூலமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இது மட்டுமின்றி, அனைத்துப் போட்டித்தேர்வுகள் குறித்த தகவல்கள், வேலைத்தகவல்கள், உயர்கல்வி வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விவரங்களையும் ஒருங்கே அறிந்து கொள்ளலாம்.

வழிகாட்டுதலின் ஓர் அம்சமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இலவசப் பயிற்சி தரப்படுகிறது. கடந்த ஆண்டில் 1150 பேர் பயிற்சி பெற்றதில் 254 பேர் தேர்ச்சி பெற்றனர்.

பதிவுதாரர்கள் தங்களின் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை பதிவுதாரர்கள் உரிய நேரத்தில் புதுப்பிக்கத் தவறினால் இரண்டு மாதங்கள் வரை புதுப்பித்துக்கொள்ளலாம். அப்போதும் தவறினால் ஒருமுறை மட்டும் சிறப்புச் சலுகையாக 18 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

இச்சலுகையை மறுமுறை பெற இயலாது.

1) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

எண்.140, குயில் தோட்டம்,

ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகை,

முதல்மாடி, சாந்தோம் நெடுஞ்சாலை,சென்னை - 4.

2) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

துடியலூர் அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

3) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு),

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

கோ.புதூர், மதுரை - 625 007.

4) உதவி இயக்குநர்,

தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 212, ஆர்.கே. மடம் சாலை, மந்தைவெளி,

சென்னை - 4.

5) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகம்,

வல்லம் சாலை, அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

தஞ்சாவூர் - 613 007.

6) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசு ஐ.டி.ஐ. வளாகம்,

கோ.புதூர், மதுரை - 625 007.

7) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.23, வில்லியம்ஸ் சாலை,

திருச்சிராப்பள்ளி - 620 001.

8) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

9) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.16, சின்னைய்யா தெரு,

வடக்கு மரவனேரி,

சேலம் - 636 007.

10) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,டி.என்.எச்.பி. காம்ப்ளக்ஸ்,

கீழ்தளம், 2-வது அவென்யு,

அண்ணாநகர், சென்னை - 600 040.

11) உதவி இயக்குநர்,

ஆதி திராவிடர் மற்றும்

பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு

மற்றும் வழிகாட்டும் சிறப்பு அலுவலகம்,எண். 10 - 20, ஆற்காடு சாலை, காகிதப்பட்டரை,

வேலூர் - 632 012.

12) உதவி இயக்குநர்,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு

மற்றும் வழிகாட்டும் சிறப்பு அலுவலகம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.23, வில்லியம்ஸ் சாலை,

திருச்சிராப்பள்ளி - 620 001.

13) உதவி இயக்குநர்,

பழங்குடினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.5, கிழக்கு மெயின் சாலை,

காந்திநகர், திருவண்ணாமலை - 606 601.14) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

ஜி.ஆர்.எஸ். எண். 59, 14ஏ,

அண்ணாநகர் தெரு,

இராமநாதபுரம் - 623 501.

15) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.83, மங்களபுரம் ரயில்வே

ஸ்டேஷன் சாலை,

திண்டுக்கல் - 624 603.

16) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

வார்டு எண்.16, கதவு எண். 1385,

நேருஜி சாலை,

தேனி - 625 531.

17) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

20-15-15ஏ, தரையூர் சாலை,

பெரம்பலூர்.

18) தொழில்துறை வழிகாட்டும் அலுவலர்,

தொழில்முறை வழிகாட்டும் அலுவலகம்,

57-இ, ஜஸ்டிஸ் வில்லா,

ஓல்டு கார்டன் சாலை,

உதகமண்டலம் - 643 001.

19) தொழில்துறை வழிகாட்டும் அலுவலர்,

பழங்குடியினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம்,

சங்கராபுரம் - 606 401.

20) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,

துணை வேலைவாய்ப்பு அலுவலகம், ஓசூர் - 635 125.

21) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், (தொழில் நுட்பப் பிரிவு),

தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய வணிக வளாகம்,

24, சர் தியாகராய சாலை,

ஆலை அம்மன் கோவில் எதிரில்,

தேனாம்பேட்டை, சென்னை - 18.

22) உதவி இயக்குநர்,

பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்

வழிகாட்டும் அலுவலகம்,

எண். 51, பழைய டிஸ்ட்ரிக்ட் கோர்ட்,

கட்டடம், கொக்கிராக்குளம்,

திருநெல்வேலி - 627 009.

23) உதவி இயக்குநர்,

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான

தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

24) உதவி இயக்குநர்,

பழங்குடியினருக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 16, சின்னைய்யா தெரு,

வடக்கு மரவனேரி,

சேலம் - 636 007.

25) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.1/16, ஏ.ஏ. சாலை,

விருதுநகர் - 626 001.

26) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

பிளாட் எண். 4,5 மற்றும் 6,

கதவு எண்.1, சி.பி. நாயுடு தெரு,

திருவள்ளூர் - 602 001.

27) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம்,

டி.என்.எச்.பி. காம்ப்ளக்ஸ், கீழ்தளம்,

2-வது அவென்யூ, அண்ணா நகர்,

சென்னை - 600 040.

28) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

செம்மண்டலம்,

கடலூர் - 607 001.

29) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

14, அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

கோரப்பள்ளம்,

தூத்துக்குடி - 628 101.

30) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

56, டீச்சர்ஸ் காலணி,

காமராசர் அவென்யூ, அடையாறு,

சென்னை - 600 020.

31) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

பிளாட் எண். 35-36,

ஆறுமுக செட்டியார் லே அவுட்,

மருதூர் கிராமம், விழுப்புரம் நகராட்சி,

விழுப்புரம்.

32) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எத்திராஜ் கல்யாண மண்டபம்,

நாகைசாலை, திருவாரூர் - 610 001.

33) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

5, கிழக்கு மெயின் சாலை,

காந்தி நகர், திருவண்ணாமலை - 606 601.

34) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 69, டி.எஸ்.எஸ். 1223 - 1225,

பெருமாள் வடக்கு தெரு,

நாகப்பட்டினம் - 611 001.

35) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 122, தெற்கு ரத வீதி,

சிவகங்கை - 623 560.

36) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.6, 7, 2-வது குறுக்குத் தெரு,

செங்குந்தபுரம்,

கரூர் - 639 002.

37) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

20-ஏ, 4-வது கிராஸ் தெரு,

கோ - ஆப்ரெடிவ் காலனி,

கிருஷ்ணகிரி - 635 001.

38) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.5391, மார்த்தாண்டபுரம்,

2-வது தெரு, புதுக்கோட்டை - 622 001.

39) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

57 இ, ஜஸ்டிஸ்வில்லா, ஓல்டு கார்டன் சாலை,

உதகமண்டலம்-643001

40) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எம். 58, இராமவர்மாபுரம்,

கன்னியாகுமரி (இருப்பு)

நாகர்கோவில் - 629 001.

41) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.51, பழைய டிஸ்ட்ரிக்ட் கோர்ட் பில்டிங்,

கொக்கிரக்குளம், திருநெல்வேலி - 627 009.

42) மண்டலத் துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)

மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம்,

மாவட்ட நல நிதிக்குழு வணிக வளாகம்,

எண்.16, வில்லியம்ஸ் சாலை,

கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி - 1.

43) உதவி இயக்குநர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

நெ.11, வைகுண்டபெருமாள் கோயில்,

சன்னதி தெரு, காஞ்சிபுரம் - 631 502.

44) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.3/86, கொண்டிசெட்டிப்பட்டி கிராமம்,

மோகனூர் சாலை, நாமக்கல்.

45) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

தொழில்நெறி வழிகாட்டும் நிலையம்,

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

செம்மண்டலம், கடலூர் - 607 001.

46) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண். 19 - 20, ஆற்காடு சாலை,

காகிதப்பட்டரை, வேலூர் - 632 012.

47) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், (தொழில் நுட்பப் பிரிவு)

அரசினர் ஐ.டி.ஐ. வளாகம்,

துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை,

கோயம்புத்தூர் - 641 029.

48) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

எண்.4, சென்னிமலை சாலை,

ஈரோடு - 638 002.

நன்றி தினமணி

Saturday, March 13, 2010

இஸ்லாத்தை ஏற்ற பெரியார்தாசன்





பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியதாக அறிவித்துள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பரக்கத்தாபாத் தவ்ஹீத் ஜமாத் மாதாந்திரகூட்டம்









ஏக இறைவனின் திருப்பெயரால்…...

பரக்கத்தாபாத் தவ்ஹீத் ஜமாத்தின் மாதாந்திரக்கூட்டம் 12-03-2010 வெள்ளி அன்று மாலை மக்ரிப்க்கு பிறகு துபாய் கராமாவில் நடைப்பெற்றது. அதில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், ஊரில் பள்ளி கட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நமதூர் தவ்ஹீத் சகோதரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தவறாமல் மாதந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் பரங்கிபேட்டை சகோ. இஸ்மாயில் அவர்கள் ”நபிவழியே நம்வழி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவுற்றது....

நித்தியானந்தா: கடவுளாக வணங்கப்பட்ட காமக் கொடூரன்!













இறைவனின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாக இருந்துவருகின்றது. பணம், புகழ், உல்லாச வாழ்க்கைக்காக இந்த ஆசாமிகள் (போலி) சாமிகளாக மாறிவிடுகின்றனர். இந்த போலிசாமியார்களின் லிஸ்ட்டில் புதிதாய் சேர்ந்தவன் தமிழகத்தை சேர்ந்த ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள். பிரபல நடிகையுடன் மிககேவலமாக நடந்துகொண்ட காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளிவந்த பிறகு இந்த காம கொடூரனின் சுயரூபம் வெளி உலகத்திற்க்கு வந்தது. கடவுளாக மக்களால் வணங்கப்பட்ட இந்த காம கயவனை தமிழக, கர்நாடக அரசுகள் தேடி வருகின்றது.

ராஜசேகரன் என்கின்ற பரமஹம்ச நித்யானந்தா சுவாமி? :

திருவண்ணாமலையில் 1978-ல் பிறந்த இந்த ராஜசேகரன் முதலியார் சமூகத்தை சேர்ந்தவன். 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்தான். தமிழகத்தில் இவனுடைய பூச்சாண்டி எடுபடவில்லை என பெங்களூர் சென்றார். மக்களை கவரும் வண்ணம் பேச துவங்கியதால் இந்த தொழிலில் படுவேகமாக முன்னேறி மிக குருகிய வயதில் (போலி) கடளவுளானான்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவனுக்கு கோயில் உள்ளது.. இவனுடைய கதவை திற காற்று வரும் என்கின்ற பேச்சு (புத்தக வடிவிலும் உள்ளது) இவனுக்கு பெரும் புகழை தேடிதந்தது. நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இந்த (போலி) சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. தியானம் கற்று தருகின்றேன், ஆசனம் கற்று தருகின்றேன் என்ற பெயரில் பலகோடிகளை சம்பாதித்துள்ளான் இந்த விடலை பையன். உடல் தேவைகளுக்காக பல் வேறு நடிகளைகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு இன்று காவல் துறைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளான் இந்த சில்மிஷ இளைஞன்.

பத்திரிக்கைகளும் (போலி) சாமியார்களும் :

தமிழகத்தில் ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ஆதரவான பத்திரிக்கை உண்டு. இந்த நித்தியானந்தாவின் ஆஸ்தான பத்திரிக்கை குமுதம் ஆகும், ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் பாபா, சுகபோனந்தா இந்த நித்தியானந்தா போன்ற சாமியார்களின் கிருக்கு வார்தைகளை தத்துவங்களாக மக்களிடம் எடுத்து செல்வது இந்த குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள். (ஜக்கி வாசுதேவின் ஆஸ்தான பத்திரிக்கை நக்கீரன்).

இந்த ஈன பிறவியை இன்டெர்னெட்டில் பிரபலமாக்கியது சாரு நிவேதிதா. குறி சொல்லும் பையனை கார்ப்ரேட் சாமியாராக மாற்றியது குமுதம் பத்திரிக்கையும் சாரு நிவேதிதாவும் தான்.

ஏன் இவர்கள் சாமியார்கள் ஆனார்கள்

இன்றைக்கு அரசியலைவிட மிக அதிகமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக இந்த சாமியார் தொழில் உள்ளது. பல கோடிகளை கொள்ளை அடிக்கும் (உயர்பதவிகளில் இருக்கும்) அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த சாமியார்கள்தான் புகழிடம். ஊர் பணத்தை ஏமாற்றுகின்றோமே என மன உலைச்சலில் வாடும் இவர்களுக்கு இந்த சாமியார்கள் யோகா மூலம் மன உலைசலை நீக்கி மேலும் கொள்ளை அடிக்க வழிவகை செய்கின்றனர்.

மேலும் பண்ணாட்டு நிறுவங்களில் பல லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் பெரும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகின்றனர், இவர்களிடமும் தியானம் கற்று கொடுக்கின்றோம் என ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை வாங்குகின்றனர் இந்த கார்ப்ரேட் சாமியார்கள் . இப்படி கோடிகணக்கில் கொள்ளை அடிக்கும் பணத்திற்க்கு வருமான வரி கிடையாது.

இந்த சாமியார்களிடம் உள்ள பணத்தையும் சொத்துகளையும் பறிமுதல் செய்தாலே உலக வங்கியிடம் இந்தியா வாங்கி உள்ள கடனில் பெரும் பகுதியை அடைத்துவிடலாம் அவ்வளவு கோடிகணக்கான ரூபாய் மதிபுள்ள சொத்துகள்.

வீட்டில் கொள்ளை, வங்கியில் கொள்ளை என கேள்வி பட்டுஇருப்பீர்கள், எங்காவது ஆசிரமத்தில் கொள்ளை என கேள்வி பட்டதுண்டா, திருடர்கள் கூட திருடாத அளவிற்க்கு பாதுகாப்பான பணம்.

ஏன்? எங்கு? எப்படி? என்ற கேள்வி இல்லை : வருமான வரி துரை, சுங்க வரிதுரை இவை அதிகமாக சொத்துகள் வைத்து இருப்போரிடன் அவ்வப்போது சோதனை (ரைடு) நடத்தும். இந்த சாமியார்களுக்கு அது (ரைடு) கூட கிடையாது.

உல்லாச வாழ்க்கை : சாமியாராக இருப்பதினால் பெண்களிடம் அதிகமாக நெருங்கிபழகும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதைவைத்து (போலிஸ் தொல்லை இல்லாமல்) பல பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர் இந்த காம சாமியார்கள் .

புகழின் உச்சி : இந்த காம வெறிபிடித்தவர்களுக்கு கடவுளின் அவதாரம் என்ற பட்டம், கோயில் கட்டி வழிபட ஒரு அறியாமை கூட்டம். என்னேரமும் புகழ்ந்து தள்ள துதிபாடும் கூட்டம்.

கோடிகணக்கில் பணத்தை கொட்ட தயாராக இருக்கும் அப்பாவி மக்கள், (கோடிகணக்கான பணதிற்கும் வரிகட்ட தேவை இல்லை). திருடர்கள் கூட தொடப் பயப்படும் பாதுகாப்பான பணம், பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் சொகுசு வாழ்க்கை, சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் (பிரதமர், குடியரசு தலைவராக இருந்தாலும்) காலில் விழுந்து வணங்கும் புகழின் உச்சி. இதற்க்குமேல் கடவுள் என்ற பட்டம். நினைக்கும் போதே கேட்பவர்களை சாமியாராக போய்விடலாமா என தூண்டக்கூடிய ராஜ வாழ்க்கை.

கடவுளின் பெயரால் பொய் சொல்லும் இவர்களுக்கு இப்படி பட்ட உல்லாச வாழ்க்கை ஆனால் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் மேற்சொன்ன எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு (இஸ்லாத்தை) உண்மையான வாழ்க்கை நெறியை நமக்கு போதித்தார்கள். இதிலிருந்தே இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இந்த சத்திய போதனைகளை சொல்ல இறைவனின் எந்த தூதர்களும் மக்களிடன் எந்த கூலியும் கேட்கவில்லை.
அல்-குர் ஆன் 26:109 : உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

இஸ்லாத்தில் மோசடி, பொய், விபசாரம் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளது, எனவே இறைவனுக்கு கட்டுபட்டு வாழ்ந்தால் இதைவிட சிறந்த தூய்மையான வாழ்க்கையை இறந்த பிறகு இறைவன் தருவான் என்ற மறுமை நம்பிக்கையே நமக்கு நிரந்த சுகத்தைதரும்.

மக்களே! உண்மைமையான அமைதிபெற அழைக்கின்றது இஸ்லாம்

நாம் படும் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் மிக அழகான தீர்வை சொல்கின்றது இஸ்லாம். முழுமையான இறை நம்பிக்கை இல்லாமை, முறையற்ற வழியில் பொருளாதாரத்தை ஈட்டுவது (மோசடி, லஞ்சம்), விபசாரம், பொறாமை இது போன்ற தீய்மைகள்தான் மனிதனின் நிம்மதியை கெடுக்கின்றது. இந்த தீய்மைகளையெல்லாம் தடை செய்த இறைவன் இது போன்ற தீமைகள் இல்லாமல் எப்படி கவலையில்லாமல் வாழ்வது என்ற ஒரு வாழ்க்கை திட்டத்தை இஸ்லாம் என்ற வடிவில் வழங்கிஉள்ளான். உண்மையான இஸ்லாத்தை படித்து அதன்படி நடப்பதன் மூலம் நமது வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துகொள்ளமுடியும்.

அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! நீங்கள் மக்களிடம் அநியாயமான முறையில் (லஞ்சம், மோசடி) கொள்ளை அடிப்பதினால்தான் உங்கள் மனம் அமைதி இன்றி தவிக்கின்றது. போலீஸ் ரைடு வருமோ,பணம் திருடு போய்விடுமோ, நம்மால் பாதிக்கப்பட்டவன் நம்மை கொன்றுவிடுவானோ என்ற அச்சம் தான் உங்கள் மன உலைச்சலுக்கு காரணம். நேர்மையாக இருந்துபாருங்கள், மக்களுக்கு நல்லது செய்துபாருங்கள், லஞ்சம் வாங்காமல் இருந்துபாருங்கள், எத்தனை மக்கள் உங்களை பாராட்டுவார்கள்,

பண்ணாட்டு நிறுவங்களில் (MNC) வேலை செய்பவர்களே! பதஷ்ட்டம் இல்லாமல் வேலை பாருங்கள், இந்த நிறுவங்கள் நம்மை வேலையைவிட்டு தூக்கிவிடுவதாக மிரட்டி அடிமைபோல் வேலைவாங்குகின்றனர். இதற்க்கு காரணம் அவர்கள் கொடுக்கும் சொகுசு வாழ்க்கைக்கு நாம் அடிமையாவதே, இவர்கள் வேலையைவிட்டு தூக்கிவிட்டால் எங்கே நாம் வாழும் சொகுசு வாழ்க்கை போய்விடுமோ என்ற பயத்தில் நாம் அடிமைகள் போல் வேலை செய்து கொண்டு இருக்கின்ரோம். சிக்கனத்துடன் வாழ பழகிகொண்டால் இவர்கள் மிரட்டல் நம்மை ஏதும் செய்யாது, மன அழுத்தமும் வராது. சாமியார்களுக்கு கொடுக்கும் பணமும் மிச்சமாகும்.

இஸ்லாத்தை உண்மை வடிவில் அறிய நம்மை படைத்த இறைவனின் வார்த்தையான குர் ஆனையும், அதற்க்கு விளக்கமாக ஹதீஸையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இலவசமாக குர் ஆன் Download செய்ய www.onlinepj.com என்ற இனைய தளத்திற்க்கு செல்லுங்கள்.

சாமியார்கள் வேண்டாம்! சாமியார்களை படைத்த இறைவன் ஒருவன் போது அனைத்திற்க்கும்

நம்முடைய தேவைகளை பூர்த்திசெய்ய நம்மை படைத்த இறைவன் ஒருவன் போதும். இறைவனுக்கு இடைத்தரகர்கள் கிடையாது, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதி இறைவனே. சாமியாரோ சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிரார் இறைவனோ எப்போதும் உங்கள் கூடவே இருக்கின்றான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்-குர் ஆன் 2:186)

இறைவன் எல்லாவற்றிக்கும் அதிபதி என்பது உண்மையே, ஆனால் இறைவன் நமக்கு அதை (செல்வத்தை) வழங்குவானா?, நிச்சயம் வழங்குவான், அவன் கருனையாளர்களுக்கெள்ளாம் கருனையாளன்

சில நேரங்களில் ஏன் இறைவன் நம் பிரார்த்தனையை ஏற்பதில்லை ?:
நமக்கு உள்ள பிரச்சனைகளுக்கு நாம் நமக்கு தெரிந்த தீர்வை இறைவனிடம் கேட்கின்றோம்

ஆனால் அதைவிட சிறந்த தீர்வை இறைவன் அறிந்து வைத்துள்ளான். நாம் கேட்பதை கொடுப்பதைவிட நமக்கு எது சிறந்ததோ அதைகொடுக்கின்றான் நம் இறைவன். நம் தேவைகளை நம்மை விட இறைவன் அதிகம் அறிந்தவன். நாம் இறைவனுக்கு கட்டுபட்டு நல்ல காரியங்களை செய்து நமது தேவைகளை தொடர்ந்து இறைவனிடம் கேட்டுகொன்டே இருப்போம் இறைவன் நமக்கு எப்போதும் சிறந்ததையே வழங்கிகொண்டு இருப்பான், இறைவன் வழங்கியதில் திருப்தி கொள்வோம், அமைதியாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்.

சங்பரிவாரத்தின் பார்பன பக்தி : இந்த நித்தியானந்த சாமியார் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை கண்டித்து ஆசிரமங்களை சூரையாடும் இந்த சங்பரிவார கும்பல்கள், காஞ்சி சங்கராசாரியார் இதே போல் பெண்களிடம் சிலமிஷம் செய்ததாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டபட்ட போது , காஞ்சி சங்கராசாரியாரின் ஆசிரமத்தை சூரையாடவேண்டியதுதானே. சங்கராசாரியார் விஷயத்தில் அடக்கிவாசித்தன இந்த சங்பரிவார கும்பல். ஏனென்றால் காஞ்சி சங்கராசாரியார் ஒரு பார்பனர். ஆனால் இவரோ ஒரு முதலியார். பார்பனர்களுக்கு ஒரு நீதி பாமரர்களுக்கு ஒரு நீதி என்ற மனு தர்மத்தை கடைபிடிக்கின்றனர் இந்த பார்பன விசுவாசிகள்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அனி