Tuesday, July 6, 2010

பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இடஒதுக்கீடுக்காக போராட்டத்தில்  இலட்சக்கணக்கான  மக்கள் வெள்ளத்தில் சென்னை திக்குமுக்காடிப்போனது. இந்த போராட்டத்தின் விளைவாக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோன் சிங் அழைத்ததன் அடிப்படையில் சகோ. பி.ஜைனுலாப்தீன், சகோ. ஷம்சுல்லுஹா, சகோ. அப்துல்ஹமீது, சகோ. கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் டெல்லி சென்றனர். ன்று (06-07-2010) காலை மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கமளித்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஜுலை 4 மாநாடு சம்பந்தமாக எடுபடாத வாதங்கள்.....

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்றைய தினம் மக்கள் வெள்ளத்தில் மிதந்த சென்னை மாநகரில் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மாநாடடிற்கு மக்கள் கூட்டம் வராமல் தடுப்பதற்காக பாப்புலர் ஃபிரண்ட் இந்தியா, ஷம்சுதீன் காசிமி (இட ஒதுக்கீட்டிற்காக ஜெயலலிதாவை சந்தித்தவர்), ஜாக், அபூ அப்துல்லாஹ் மற்றும் மிகக் கேவலமான முறையில் செயல்பட்ட பொய்யன் பாக்கர் கூட்டத்தினர் இவர்களின் செயல்பாடுகளை தோலுரித்து சகோ. பிஜே அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் அதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Saturday, June 26, 2010

10% இட ஒதுக்கீடு தரும் கட்சிகளுக்கே ஓட்டு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

நெல்லை: முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை. இதனால் அக்கட்சியின் பலம் குறைந்துவிட்டது.

இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்டவில்லை.

இந்நிலையில் இடஓதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இடஓதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் பேரணி மற்றும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளது.

மாநாட்டிற்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. தவ்ஹீத் ஜமாத் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றார் அவர்.

மாநாட்டுப் பணிகளுக்கு வாரி வழங்குவீர்!

தலைமைகழக செய்தி

எதிர் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் மாநில மாநாடு பற்றி நாம் அறி வோம். மத்திய அரசுப் பணிகளில் முஸ்லிம்ளுக்கு மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரையின்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோருவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ‘ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு’ சிறப்புற நடக்க தகுந்த பொருளாதார வசதிகள் தேவை. எனவே நீங்களும் உங்களது சக்திக்கேற்ப நிதியுதவி அளித்து இந்த சிறப்பான நிகழ்ச்சி மேலும் சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை இல்லாத அளவுக்கு பல லட்சங்களில் திடல் வாடகை.

குடி தண்ணீர் பிரச்சினை இல்லாத அளவுக்கு மண்டபங்களிலும், மாநாட்டுத் திடலிலும் இலவசமாக குடிநீர் பாக்கெட்டுகள்.

மனிதனின் அத்தியாவசிய அவசரத் தேவையை தங்கு தடையின்றி நிறைவேற்றிட நடமாடும் கழிவறை.

ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகையில் ரெமேட் கழிவறை மற்றும் திடலிலேயே நிரந்தரக் கழிவறை, வரிசையில் காத்திருக்காமல் சிறுநீர் கழிக்க அறைகள்.

கழிவறை மற்றும் உளூ போன்றவற்றிற்கு திடலிலேயே நிரந்தரத் நீர்த் தொட்டியல்லாமல் மெட்ரோ வாட்டர் நிரப்பப்பட்ட 200 மீட்டர் இடைவெளியில் ஒரு டேங்.

லட்கக்கணக்கான மக்களின் உணவு, குடிபானம் மற்றும் இதரவற்றை பூர்த்தி செய்வ தற்காக 100க்கும் மேற்பட்ட பிரியாணி, சாப்பாடு, டிபன், டீ, ஸ்நாக்ஸ், ஜூஸ், வாட்டர், இஸ்லாமிய புத்தகங்கள், புர்கா, சி.டி., டி.வி.டி., ஸ்டால்கள் அனைத்தும் வாடகையில்லாமல்.

பஸ், வேன், ரயில் மார்க்கமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மாநாட்டுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து ஓய்வெடுத்து விட்டு பேரணிக்கு வருவதற்கு வசதியாக பல லட்சங்கள் வாடகையில் 100க்கும் மேற்பட்ட மண்டபங்கள் மற்றும் மர்கஸ்கள்.

லட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்து விடக் கூடாது என்பதற்காக அனைவரும் காணும் வகையில் LED (14-8 அடி, 17-10 அடி) அமைத்தல்.

மத்தியில் இடஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதால் முன் எப்போதும் இல்லாத வகையில் தேசிய ஹிந்து, ஆங்கிலம், உருது, தமிழ் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பல லட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள்.

நடைபெறும் பேரணி & மாநாடு அனைத்தையும் ஒளிபரப்பத்தக்கவாறு தரமான ஒளி, ஒலி பதிவு.

மண்டபங்கள், போக்குவரத்து, பேரணி, மாநாட்டுத் திடல் போன்றவற்றில் சேவை செய்வதற்காக பல நூற்றுக்கணக்கான சீருடை அணிந்த தொண்டர்கள்.

பேரணி, மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவதால் அவர்ளுக்கு ஏற்படும் அவசர உதவிக்குத் தேவையான இலவச மருத்துவ மையங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள்.

வெளிநாடு வாழ் தமிழ் நெஞ்சங்கள் நாமும் மாநாட்டில் பங்கெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்க www.tntj.net மற்றும் www.onlinepj.com போன்ற இணைய தளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு.

அல்லாஹ்வுக்கு அடுத்து நம்மை நம்பி வரும் மக்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து வீடு திரும்புவதற்கு வசதியாக பாது காப்பு ஏற்பாடுகள்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போதிய காவல்துறை கண்காணிப்புக்கு ஏற்பாடு.

எனவே உங்கள் பொருளாதார உதவிகளை பணமாகவோ அல்லது வங்கி வரைவோலைகளாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

வங்கி கணக்கு விபரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வங்கி கணக்கு எண். 788274827,
இந்தியன் வங்கி, மண்ணடி கிளை, சென்னை லி 01

அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை – 01. போன் : 044 – 2521 5226, செல் : 99520 56555

Sunday, March 28, 2010

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும் செய்தி

ஜுலை மாநாட்டிற்கு மக்களை அழைப்பதற்கு ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கை மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அதில் உள்ள முக்கிய அம்சங்கள் இங்கு தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :

1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.
ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.
1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.
1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்
1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.
25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மக்கள் தொகை (பக்கம் 13)
முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)

முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %
அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.

2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)

6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடி இருப்புகள் : (பக்கம் 23)

1. முஸ்லீம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லீம்களில் 41.2% பேர் அடிப்படைகட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லீம்கள் பேர் மட்டுமே வசிக்கதகுந்த வீடுகளில்வாழ்கின்றனர்.

வறுமை கோட்டிற்க்குகீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லீம்கள்தான் அதிகம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்புரத்தில் 27.22 % முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்
2. கிராமபுரத்தில் 36.92% முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றனர்
அதாவது 100-க்கு 36 முஸ்லீம்கள் உணவு உடை, இருப்பிடம் இல்லாமல் வாழ தகுதி அற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைகோடு என்றால் என்ன ?

அரசு 13 காரணிகளை வைத்துள்ளது இதில் மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களாக கருதபடுவர். ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையில் பக்கம் 69, 185 முதல் 188 வரை வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் தகுதிகள் வரையருக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணக்கள் (டிவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள். இப்படி வாழ்பவர்களை அரசு வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் என குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லீம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமை கோட்டிற்க்கு கீழ்) வாழ்கின்றன்ர். தமிழகத்தில் 5 -இல் ஒரு முஸ்லீம் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழ்கின்றார்

மாதவருமானம் (பக்கம் 30)
ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

பரிந்துரைகளில் சில :

1. இந்திய அரசியல் அமைப்புசட்டம் Article 16 (4) விதி -படி சிறுபாண்மையினருக்கு 15% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லீம்களுக்கு கொடுக்கவேண்டும். ஏனெனில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனதொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்கப்படவேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்க்கு முஸ்லீம்கள் கிடைக்கவில்லை என்றால் பிற சிறுபாண்மை சமுதாயத்திற்க்கு அந்த இடங்களை வழங்கவேண்டும்.(பெரும்பாண்மை சமுதாயத்திற்க்கு கொடுக்ககூடாது)- (பக்கம் 150,152)

2. கல்வி வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லீம்களுக்கு 10% இட ஒதுக்கீடும். பிற சிறுபாண்மை மக்களுக்கு 5% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3. SC/ST-க்கு இருப்பது போல் முஸ்லீம்களுக்கும் கல்வி கற்பதர்க்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்ந்தபட வேண்டும். விண்னப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்வி கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

4. முஸ்லீம்களுக்காக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலை கழங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும் இந்த பல்கலை கழங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி முஸ்லீம் மாணவர்களின் நலனுக்காக செயல்படும் பல்கலை கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

5. அங்கன்வாடிகள், நொவோதியா விதியாலயாஸ் (பள்ளிகள்) போன்றவை முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தபட வேண்டும். முஸ்லீம்களின் குழைந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லீம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6. முஸ்லீம்/கிருத்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கபெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் இரண்டாவது வால்யூமில் (பகுதி) பிற (அரசு மற்றும் அரசு சார) அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் பரிந்துரைகளும் உள்ளது. அதில் தேர்ந்தெடுத சில பரிந்துரைகளில் தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.

அந்த பரிந்துரைகளில் சில :

1. கல்வியில் பின் தங்கி உள்ள முஸ்லீம் மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்க வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

2. சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லீம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரவேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

3. (பொருளாதாரத்தில் பின் தங்கிய) முஸ்லீம்களுக்கு சமையல் கேஸ் இனைப்பு மிக குறைந்தவிலையில் வழங்கபட வேண்டும். (பக்கம் 49 வால்யூம் 2)

4. அரசின் நலதிட்ட உதவிகள் பெருவதில் முஸ்லீம்கள் பெருமளவில் பின் தங்கிஉள்ளனர், எனவே அரசின் நலதிட்ட உதவிகள் பற்றி முஸ்லீம்களுக்கு அரசு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நல திட்ட திட்ட உதவிகள் முஸ்லீம்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். (பக்கம் 48 வால்யூம் 2)

முஸ்லீம்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்க்கு இந்த பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைபடுத்தபடவேண்டும். இந்த அறிக்கை அமல்படுத்தபட்டால் IAS,IPS, IFS , உள்துறை, உளவுதுறை என எல்லா மத்திய அரசு பணிகளிளும் 10-ல் ஒரு முஸ்லீம் இருக்க முடியும்.

காலத்தே பயிர் செய் எனபதுபோல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது குரலை அரசுக்கு உரக்க தெரிவிக்கவேண்டும்.

இந்திய அளவில் முஸ்லீம்களின் உரிமையை மீட்க நடக்கும் முதல் மாநாடாகவும் முன்னோடி மாநாடாகவும் திகழ தலைநகர் சென்னையை நோக்கி திரண்டு வருங்கள்.

இட ஒதுக்கீட்டால் பெரிதும் பயன் பெருவது மாணவர்கள் தான், எனவே மாணவர்களே! வருங்காலாத்தை வளமாக்கிட காலம் தாழ்த்தாமல் களப்பணியை ஆற்றிட களம் இறங்குங்கள். இன்றே ஆயத்தமாகுங்கள். மாநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைக்க மாநாட்டை மக்கள் வெள்ளம் ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

தொகுப்பு
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி

--
السلام عليكم ورحمة الله وبركاته

Monday, March 22, 2010

தர்ஹா-சந்தனக்கூடு தேவையா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..

கடந்த ஆண்டு நமது ஊரில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தர்ஹா-சந்தனக்கூடு மற்றும் அனாச்சாரங்களை தடுத்து நிறுத்தவேண்டும் அதனால் நமதூர் மக்கள் மறுமையில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தவ்ஹீத் சகோதரர்கள் துபையிலிருந்து ஜமாத்திற்கு கடிதம் எழுதினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. பின்பு அந்த கடிதம் நகல் எடுக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டாவது அவர்கள் அதை நிறுத்தவேண்டும் அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் குர் ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த கடிதத்தை இங்கு வெளியிடுகிறோம்..அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையை தந்து அருள்புரிவானாக......

இன்று முத்தாரம் இதழ் அலுவலகம் முற்றுகை!


29/03/2010 தேதியிட்ட முத்தாரம் இதழில் முஹம்மது நபி என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை தமது உயிரினும் மேலாக மதித்த போதும் அவர்களுக்கு சிலைவைப்பதையும் உருவமாக வரைவதையும் ஏற்றுக் கொள்வதில்லை.

நபிகள் நாயகத்திற்கு சிலைவைத்தாலோ, கார்ட்டூன் போட்டாலோ முஸ்லிம் சமுதாயம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்பது பாமர மக்களுக்கும் தெரிந்த உண்மை.

தெரிந்து கொண்டே முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக கார்ட்டூன் வரைந்ததற்காக முத்தாரம் இதழ் தனது சன் தொலைகாட்சி மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் இன்று மாலை நான்கு மணிக்கு முத்தாரம் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிடுவார்கள்.

மேலும் நாளையதினம் தமிழகமெங்கும் தினகரன், குங்குமம், முத்தாரம் இதழ்களைத் தீவைத்துக் கொளுத்துவதுடன் மாநிலமெங்கும் உள்ள தினகரன் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.