Saturday, June 26, 2010

10% இட ஒதுக்கீடு தரும் கட்சிகளுக்கே ஓட்டு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

நெல்லை: முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை. இதனால் அக்கட்சியின் பலம் குறைந்துவிட்டது.

இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்டவில்லை.

இந்நிலையில் இடஓதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இடஓதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் பேரணி மற்றும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளது.

மாநாட்டிற்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. தவ்ஹீத் ஜமாத் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றார் அவர்.

No comments: